
வெளிநாட்டு உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதும் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொள்வதும் இந்த நேரத்தில் நாட்டுக்கு அவசியமானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, உலகப் பொருளாதாரம் கடும் ஆபத்தில் இருக்கும் பின்னணியில் உள்நாட்டுப் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதே வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2048ஆம் ஆண்டு அபிவிருத்தியடைந்த நாடு என்ற கனவை நனவாக்குவது ஏற்றுமதித் துறையின் ஊக்குவிப்பிலேயே தங்கியுள்ளதா என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்தார்.