
தற்போது சமுர்த்தி மானியம் பெறும் குடும்பங்களில் அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 93,094 குடும்பங்கள் தொடர்ந்து சமுர்த்தி கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்மொழிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சமுர்த்தி மானியம் பெறும் மக்களில் பன்னிரெண்டு இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்கள் நிவாரணப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களில், எட்டு லட்சத்து 87,653 குடும்பங்கள் நிவாரண உதவிக்கு தகுதி பெற்றுள்ளதோடு இழப்பீட்டுப் பலன்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அது பூர்த்தி செய்யப்பட்டவுடன் புதிய விண்ணப்பங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 17 லட்சத்து 92,265 குடும்பங்கள் நிவாரணப் பலனைப் பெறத் தகுதி பெற்றுள்ளதுடன், 46,612 இலட்சம் புதிய குடும்பங்கள் நலன்புரிப் பலன்களைப் பெற புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பலன்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.