
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் செல்லுபடியற்ற ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நீதிபதிகளில் ஒருவர் இன்று விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த மனுவந்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, ஐவரடங்கிய நீதிபதி நீல் இத்தவெல இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.
அத்தோடு, உரிய வெற்றிடத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் நியமிக்கப்படுவார் எனவும் தலைமை நீதிபதி அறிவித்தார்.
மேலும்,, நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, தம்மிக்க கணேபொல மற்றும் டி.என்.சமரகோன் ஆகிய ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16, 17, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படஉள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் கொலை மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்து இந்த அழைப்பாணை சட்டவிரோதமானது எனவும், குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டினை செல்லுபடியற்றதாக்கும் ஆணையினை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.