
இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான குத்தகை அழைப்பை அமைச்சர் திரன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக சிறப்பு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் நியமிக்கப்படுள்ளது.
இதன்படி, நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்திற்கொண்டு புதிய டெண்டர் கோருவதற்கு பொறுப்பான அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு, இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அறிவிப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து புகார்களைப் பெற்றுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார்..
இதேவேளை, பொறுப்பான அமைச்சர் திரான் அலஸ், உரிய விலைமனு அழைப்பை இரத்து செய்து, சாதாரண கொள்முதல் நடைமுறையின் மூலம் குத்தகையினை கோரியுள்ளதாவும் ஆண்டுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான மின்னணு கடவுசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கான செலவு கிட்டத்தட்ட 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.