
தாய்ப்பாலுக்கு பதிலாக பால் மா கொடுப்பதனால் குழந்தைகளின் போசாக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சனைகள் ஏற்படுவதாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நிஷானி லூகாஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் மாதத்துடன் இணைந்து இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய தாய்ப்பால் வாரம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய தாய்ப்பால் வார விழா அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.