
தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சின்ஹவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நாளைய தினம் அமைச்சு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எல்,பி,எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின் போது தேசிய கீதத்தை சிதைத்ததாக உமாரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளது.
தேசிய கீதம் திரித்து பாடப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.