
அனுராதபுரம் – எரியாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, குறித்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, வேன் ஒன்றும் கொள்கலன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இவர்கள் கஹடதகஸ்திகிலிய, கிரலாகல பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உம்ராவுக்கான புனித யாத்திரைக்காக விமானப் பயணச்சீட்டுகளை தயாரித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வ்மது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.