
வடமேற்கு பிராந்தியத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சுமார் 40,000 விவசாயக் குடும்பங்கள் உடவலவ நீர்த்தேக்கம் மற்றும் சந்திரிகா குளம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் நிர்க்கதியாகியுள்ளதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.
அத்தோடு, பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்களின் ஆதரவு போதாது எனவும் துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடனும் கலந்தாலோசித்து இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் துணை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.