2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடப்புத்தகங்களோ சீருடைகளோ இதுவரை கிடைக்காத பட்சத்தில் கல்வி அமைச்சின் புத்தக வெளியீட்டு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வறுமையில் வாடும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு பயிற்சிப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.