
இலங்கைக்கு 450 மில்லியன் இந்திய ரூபா மானியம் கிடைத்துள்ளது.
இதன்படி, இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்க்காக குறித்த மானியமானது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறித்த இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உரிய ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், உரிய காலக்கெடுவின்படி இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகையில் 15% முன்பணமாகப் பெறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான காசோலைகளை இந்தியா உயர்ஸ்தானிகர் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டுத் திட்டக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.