
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்தோடு, நீதிமன்றத்தில் இருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (05) லாகூரில் வைத்து கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் அவர் ஐந்து ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.