
அடுத்த பருவத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட பூந்தி உரம் (எம்ஓபி) முழுவதையும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மற்றொரு ரக உரத்தின் விலையினை குறைக்கவும் உரம் வழங்குவதை அரசு விலக்கிக் கொண்டு, உரம் வாங்க தேவையான பணத்தினை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் தற்போது 1.2 மில்லியன் நெல் விவசாயிகள் உள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.