
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் நாட்டில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மகாவலி பிரதேசம், உடவலவ மற்றும் சந்திரிகா குளத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கே மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும், தொடர்ந்து மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.