
காலி சிறைச்சாலையின் உத்தியோகத்தர் ஒருவர் கடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் பேருந்தில் ஏறிய இனந்தெரியாத குழுவினர் குறித்த அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பில் தெரியவருவதாவது 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக,சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.