
பம்பலப்பிட்டி, சீ மாவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற கார் ஒன்று கலால் அதிகாரிகளால் சுடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கலால் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் வேனில் வந்த கலால் அதிகாரிகள், குறித்த காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு தெரிவித்ததாகவும், நிறுத்தாமல் வாகனம் ஓட்டியதால், காரின் டயரை அதிகாரிகள் சுட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் காரில் இருந்த சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளதோடு கலால் திணைக்கள அதிகாரிகளும் பம்பலப்பிட்டி பொலிஸாரும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.