
பம்பலப்பிட்டிய சீ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு கலால் திணைக்கள அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (08) கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சந்தேக நபருக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணையில் குறித்த குழுவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.