
கொரியாவில் நடைபெற்ற 25வது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொண்டுள்ள இலங்கை சாரணர் அணி சேமங்கம் ஜம்போரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அதற்க்கான காரணம் நாட்டைப் பாதிக்கப் போகும் கானுன் புயல் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சியோலுக்கு அருகில் உள்ள சோனனில் உள்ள டாங்குக் பல்கலைக்கழகத்திற்கு இலங்கை சாரணர் குழு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இலங்கை சாரணர் குழு பாதுகாப்பாக தங்குமிடத்தை அடைந்துள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.