
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் தாமதமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பாகிஸ்தானின் தேர்தல்கள் மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் புதிய தேர்தலை நடத்துவதற்கு முன் கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் அ பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாகிஸ்தான் நாடாளுமன்றம் தற்போது அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதோடு 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையால் பொதுத்தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் அவரது அரசியல் நடவடிக்கைகள் 05 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் பாகிஸ்தானின் தேசிய சபையும் கலைக்கப்பட்டுள்ளதால், 03 நாட்களுக்குள் இடைக்கால தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.