
மியான்மர் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 17 உரிளந்தலைந்துள்ளதுடன் உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அவர்கள் மியான்மரில் இருந்து மலேசியா நோக்கிச் சென்றதாகவும் இறந்தவர்களில் 10 பெண்களும் ஏழு ஆண்களும் அடங்குதோடு அனைவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று ஷ்வே யாங் மாட்டா அறக்கட்டளை மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் பியா லாட் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரக்கைன் மாநிலத்தின் தலைநகரான சிட்வே அருகே இந்த விபத்து நடந்துள்ளதுடன் உயிர் பிழைத்த எட்டு பேர் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் படகில் மூன்று படகு ஓட்டுநர்கள் உட்பட 58 பேரை ஏற்றிச் சென்றதாக சிட்வேயில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் சிஎன்என் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூர் காவல்துறை மற்றும் மீட்பு அறக்கட்டளையின் கூட்டு மீட்பு நடவடிக்கை நடந்து வருவதுடன் மேலும் 33 பேர் இன்னும் காணவில்லை என்றும்தெரிவிக்கப்படுவதோடு இறந்தவர்கள் ராதேடாங், மாங்டாவ் மற்றும் புத்திடாங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்