
கடனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்த உடனேயே பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையின் (RCEP) அங்கத்துவத்தைப் பெற்று, “ASEAN” அமைப்பின் பிற நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ‘ஆசியான்’ அமைப்பின் முன்னோக்கு பார்வையுடன் தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னேற்றுவதற்கு முழுமையாக ஆதரவளிப்பதாக கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் நடைபெற்ற 56வது “ஆசியான்” தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.