சீனியின் மொத்த விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
255 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனி நேற்று 275 முதல் 280 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதன்படி, 250 முதல் 255 ரூபா வரையில் இருந்த ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 260 ரூபாவாக மட்டுமே அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.இளமநாதன் தெரிவித்தார்.
உலக சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் சீனியின் சில்லறை விலை 270 ரூபா தொடக்கம் 290 ரூபாவாக இருந்ததாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.