ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, 2024 பெப்ரவரியில் சரக்கு ஏற்றுமதி வருமானத்தில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று வாரியம் குறிப்பிட்டதுடன் இது பெப்ரவரி 2023 உடன் ஒப்பிடும்போது சராசரியாக 0.17% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெப்ரவரி 2024 இல் ஏற்றுமதி செயல்திறன் ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 1.3% அதிகரித்துள்ளதாகவும்பெப்ரவரி 2023 உடன் ஒப்பிடுகையில், விவசாய ஏற்றுமதி 11.82% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதோடு 255.76 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாகவும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.