பால் தேனீர் கோப்பையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 கிலோகிராம் எடையுள்ள பால் மா பொதி ஒன்றின் விலை 150 ரூபவாகவும், 400 கிராம் பொதி ஒன்றின் விலை 60 ரூபாவாலும் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.