மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2024 ஜனவரியில் அதிக தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டு மதிப்பின் காரணமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு 2023 டிசம்பர் மாதத்தில் 16,524 ரூபாவாக இருந்த நிலையில் ஜனவரி 2024 குறைந்தபட்ச மாதச் செலவுவாக 17,014 ரூபவாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட வாரியாக உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின்படி, ஜனவரியில் ஒரு நபருக்கான அதிகபட்ச குறைந்தபட்ச மாதாந்திர செலவினத்தில் 18,350 ரூபாவினை கொழும்பு பதிவு செய்துள்ளதுடன், கம்பஹா 18,256 ரூபாவினையும் நுவரெலியா மாவட்டம் 17,892 ரூபாவினையும் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, மொனராகலை மாவட்டம் ஜனவரி மாதத்தில் ஒரு நபருக்கான குறைந்தபட்ச மாதாந்த செலவீனமாக 16,268 ரூபவாக பதிவாகியுள்ளது,