அகில இலங்கை பாடசாலை விஞ்ஞான சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட AISSA Expo 2024 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பு நெலும் பொகுண வளாகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளின் விஞ்ஞான சங்கங்களின் அங்கத்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அகில இலங்கை பாடசாலை விஞ்ஞான சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விஞ்ஞான தொழில்நுட்ப கண்காட்சியானது பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.