தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2018/2020 ஆம் ஆண்டுகளில் கற்கைநெறிகளை பயின்ற மாணவர்களை நியமனம் செய்வதற்கான தகவல் சேகரிப்பு இணையவழி முறையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 21.04.2023 முதல் 25.04.2023 வரை ncoe.moe.gov.lk இன் அறிவுறுத்தல்களின்படி, பயிற்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மேலதிக தகவல்களுக்கு கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஐப் பார்வையிடவும்.