புடவை அல்லது ஒசாரி அல்லாத ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.