
தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான கப்பல் கவிழ்ந்ததில் 31 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.
மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆழ்கடலில் விபத்துக்குள்ளானதாகவும் அவ்வேலை கப்பலில் சுமார் நூறு மாலுமிகள் தங்கியிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, புயல் காரணமாக கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் இன்ஜின் அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும். ஆபத்தில் இருந்த எழுபத்தைந்து மாலுமிகளை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவித்துள்ளன.