அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடு செல்லும் அனைவருக்கும் தொழில் பயிற்சி சான்றிதழ்கள் கட்டாயம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், முதல் தடவையாக வேலைகளுக்காக வெளிநாடு செல்வதாயின் NVQ 03 நிலை சான்றிதழ் கட்டாயம் என அதன் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தாதியர் பணிக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக NVQ 03 நிலைப் பாடநெறி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.