
எதிர்வரும் புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாதத்திற்க்கான சம்பளத்தினை ஏப்ரல் மதத்தின் 10ஆம் திகதிக்கு முன்பதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதியம் மற்றும் புத்தாண்டு கொடுப்பனவுகள் அன்றைய திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாகவும், இது பொது நிதிக்கு கூடுதல் சுமை என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், உரிய காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.