
கடந்த 3ஆம் திகதி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைத்தமைக்கான காரணங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
மேலும், போராட்டம் கலைக்கப்பட்டது தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளின் அடிப்படையில், இலங்கை மனித உரிமைகள் சட்டத்தின் 14வது சரத்தின்படி சுயமாக தலையிட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.