
காஸா பகுதியில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து, லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய இராணுவம் செயல்பட்டு வருகின்றது.
இதன்படி, ஜெருசலேமில் உள்ள “அல் அக்ஷா” மசூதியில் இஸ்ரேல் பொலிஸாரின் தொடர்ச்சியான சோதனைகள் காரணமாக காஸா பகுதியில் மீண்டும் ஒரு சூடான சூழல் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த தாக்குதல்களால், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சூடான சூழல் உருவாகியுள்ளதோடு, லெபனானில் இருந்து 34 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுவதோடு இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் உள்ள இலக்குகளை தாக்கி 10 நிமிடங்களுக்குள் 20 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.