
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, நியாய விலையில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
மேலும், கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.