கடந்த வாரத்தில் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மேலும் எதிர்வரும் மாதங்களில் இன்னும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படுகின்ற 400 கிராம் பால்மா பொதி ஒன்றினுடைய விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ளத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற 400 கிராம் பால்மா பொதி ஒன்று 1,120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 3,100 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் அளவுடைய பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 2,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதமத்தில் விலைகளில் மாற்றம் ஏற்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.