
அண்மையில் சீனாக் கலை மன்றத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கலாசார அமைச்சின் தலைமையகத்தில் அமைச்சரைச் சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியது.
இதன்படி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கலாசார ஊக்குவிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை எவ்வாறு இலக்காகக் கொள்ள முடியும் என்பது பற்றிய விடையங்களை அமைச்சர் விளக்கியதோடு அதற்காக கலை விழா நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் சீனாக் கலை மன்றத்தின் தலைவர் கியூ சின்ஜியன் மற்றும் சீனாக் கலை மன்றத்தின் பிரதிநிதிகள், அமைச்சின் உதவிச் செயலாளர் ஸ்ரீரஜீவன் மற்றும் வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.