
British council, Muslim Aid, STRIDE என்பவற்றினுடைய அனுசரனையுடன் நாடளாவிய ரீதியில் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் ACTIVE CITIZENS செயற்திட்டத்தினுடைய வடிவமான பயனுறுதிமிக்க வகையில் பிணக்கை தீர்ப்பதற்க்கு ஆதரவளித்தல் SEDR செயற்திட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் இரு சமூகங்களுக்கு இடையில் இருக்கின்ற பிணைக்கினை நீக்கும் முகமாக இடையில் சினேக பூர்வ கிரிகெட் போட்டி ஒன்றினை ஏற்படு செய்துள்ளனர்.
இதன்படி, ACTIVE CITIZENS – MUTTUR அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பசுமைக்களம் செயற்பாடு கட்டைப்பறிச்சான் சந்தோசபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இரு சமூகத்தினர் மத்தியில் பொது மைதானம் அமைப்பதில் காணப்படும் பிணக்கு தொடர்பாக இரு சமூகங்கள் மத்தியில் ஒரு மத்தியஸ்தை ஏற்படுத்தி சுமூகமான உறவை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக சேனையூர் ஸ்ரீகணேசா விளையாட்டு கழகத்துக்கும் சந்தோசபுர ஒலி ஒளி விளையாட்டு கழகத்துக்கும் இடையில் சினேக பூர்வ கிரிகெட் போட்டி நேற்று (01) மாலை சந்தோசபுர புது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் சேனையூர் ஸ்ரீகணேசா விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியதோடு இரு அனியினருக்கும் இடையில் சினேக பூர்வ உரையாடல்களும் இடம்பெற்றதோடு இதனை ஏற்பாடு செய்து சுமூகமான உறவை ஏற்படுத்திய ACTIVE CITIZENS மூதூர் குழுவுக்கு நன்றிகளையும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
மேலும், இந் நிகழ்வுக்கு விஷேட விருந்தினர்களாக ஸ்ரீகணேசா விளையாட்டு கழக தலைவர்கள் மற்றும் ஒலி ஒளி விளையாட்டு கழக தலைவர்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் பழங்குடியின அமைப்பின் தலைவர் பொருலாளர் மற்றும் இந்த செயற்திட்ட குழுவான ACTIVE CITIZENS – மூதூர் குழு உறுப்பினர்களான த .மு .ஹிஸாம், ஹரிசங்கர், தாதுர்ஷன்,இம்ரான் நஷீர், ஜில்பானா மற்றும் Muslim Aid SEDR செயற்திட்ட
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ரொசிந்தன் மற்றும் மெண்டர்
ஆகியோர் கழந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர்.