
தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதன்படி, தேசிய கொள்முதல் ஆணையத்தின் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன மற்றும் உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய திசேரா, டி.ஏ. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து, ஏ.ஜி. புபுது அசங்க குணவம்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிதி ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்க வும் உறுப்பினர்களாக துவான் நளீன் ஓசென் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.