
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3638 ரூபாவாகும்.
மேலும், 5KG எரிவாயு சிலிண்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதனுடைய புதிய விலை 1462 ஆகவும், 2.5KG எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 681 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.