
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1990 ஆம் ஆண்டு ஜீன் கரோல் என்ற பத்திரிகையாளரை துணிக்கடையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட சிவில் வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜஅத்தோடு. வுளிக் கடையின் டிரஸ்ஸிங் அறையில் டொனால்ட் டிரம்ப் பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு ஜீன் கரோல் என்ற பெண்ணுக்கு 5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.