
மொக்கா என பெயரிடப்பட்ட புயலானது பங்களாதேஷ் மற்றும் மியன்மாரின் கரையோர பகுதிகளை கடுமையாக தாக்கியுள்ள நிலையில் கடும் மழையுடனான வானிலை நிலவுவதுடன் மணித்தியாலத்துக்கு 120 மைல் வேகத்தில் கடும் காற்று வீசுவதாகவும் கரையோர பிரதேசங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், புயலின் வேகம் மேலும் வலுப்பெற்று மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதுடன்இதுவரை 5 இலட்சம் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, கடந்த இரண்டு தசாப்தங்களில் வங்கதேசத்தை தாக்கும் வலிமையான சூறாவளி இது என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.