
தென்பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இதன்படி, 7.7 ரிக்டர் அளவு கோளில் குறித்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும், பிஜி தீவுகளில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் ஏற்படுவதற்கான வம்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.