
தமது கொள்கைகளுக்கு இணங்கினால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குண்டசாலையில் கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.