
நெதர்லாந்தின் ஹேக் நகரில் முக்கிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்திய 1,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, காலநிலை மாற்றம் தொடர்பான போராட்டத்தின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கூட்டத்தை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் ரெயின்கோட் மற்றும் நீச்சல் உடைகளை அணிந்திருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்.