
கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து 9 ஏலக்காய் பொட்டிகளை திருடிய மூன்று சந்தேக நபர்களை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காயின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காய்களை ஏற்றிச் சென்ற காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இப்பலோகம, பண்டாரகம மற்றும் நிகடலுபொத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.