
மத நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் வணக்கத்துக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, நேற்று இரவு அனுராதபுரம், ஷ்ரவஸ்திபுர பகுதியில்.மத ஒற்றுமைக்கும் புத்தசாசனத்துக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் வணக்கத்துக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த வணக்கத்துக்குரிய ராஜாங்கனை சத்தா ரதன தேரர் சமூகத்தில் பேசப்படும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுவதோடு சில சந்தர்ப்பங்களில், அவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் மேலும் மக்களை புண்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.