
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய ராஜாங்கனையே சதாரதன தேரர் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுராதபுரம் பகுதியில் வைத்து நேற்று (28) இரவு கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.