
ஹிஸாம் ஏ பாவா
விளையாட்டுத் துறையின் முன்னோடியாக இருந்துவரும் ஆசிரியர் அலியார் பைசர் அவர்கள் இலங்கை வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவராக 2023/2027 நான்கு ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை வெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாக சபை தேர்தலும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தேர்தல் குழுவின் தலைமையில் இலங்கை பெட்மிண்டன் சங்க கேட்போர் கூடத்தில் நேற்று (29) நடைபெற்றது.
மேலும், உப தலைவர் பதவிக்காக 16 பேர் கடந்த ஏப்ரல் மாதம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இவர்களில் ஒருவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதோடு மூவர் தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றிருந்த நிலையில் ஏழு பேர்கள் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு இணங்க அலியார் பைசர் அவர்களும் அதில் ஒருவராக அதிகப்படியான வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவர் இலங்கையின் தேசிய விளையாட்டு சங்கமான இலங்கை பெட்மின்டன் சங்கத்துக்கு உப தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையும் வரலாற்று மைக் கல்லாகவும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.