
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமைக்கு அதியுயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த முறைமையின் ஊடாக சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.