
அலவத்துகொட, கசவத்த பிரதேசத்தில் விசேட பொலிஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அலவத்துகொட பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, வாகன சோதனையின் போது அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு லொறியில் 18 மாடுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பரசங்கஸ்வெவ, திரப்பனை மற்றும் மிஹிந்தலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.