
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இதன்படி, டெல்லியில் உள்ள ஹைதராபாத்தில் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதோடு இன்று காலை டெல்லியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியா விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று எனவும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்திக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நேற்று ஆரம்பித்ததோடு நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியா வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.